மஹிமா & GRASP இணைந்து ஸ்மார்ட் ஆலய மேலாண்மை அமைப்பு அறிமுகம் மஹிமா & GRASP இணைந்து ஸ்மார்ட் ஆலய மேலாண்மை அமைப்பு அறிமுகம் | Temple Management Software
Home/ Achievements/ மஹிமா & GRASP இணைந்து அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் ஆலய மேலா...
மஹிமா & GRASP இணைந்து அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் ஆலய மேலாண்மை அமைப்பு

மஹிமா & GRASP இணைந்து அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் ஆலய மேலாண்மை அமைப்பு

Achievement 11 Nov 2025
மஹிமா & GRASP இணைந்து அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் ஆலய மேலாண்மை அமைப்பு

டிஜிட்டல் இலக்கவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலய மேலாண்மை திட்டம் (Temple Management System) தற்போது ஆலயங்களின் ஆர்ஓஎஸ் (Return on Service) மற்றும் திவால் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை வழங்குகிறது என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 120-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகா நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றன. இதற்கான முக்கிய காரணம் முறையான ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்கறிக்கைகள் இல்லாதது ஆகும்.

இந்த சவால்களை சமாளிக்க, மஹிமா, டிஎஸ்கே சமூக நல அமைப்பு, மற்றும் GRASP Software Solutions Sdn. Bhd. இணைந்து Temple Management System எனும் இலக்கவியல் ஆலய மேலாண்மை தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  •  ஆலய மேலாண்மை டிஜிட்டல் தானியக்கம்
  •  கணக்கறிக்கை & ஆண்டு அறிக்கை தானியங்கிய முறையில் உருவாக்கம்
  •  திவால் அபாயத்திலிருந்து ஆலயங்களை பாதுகாப்பது
  • நிதி மற்றும் காணிக்கை வெளிப்படைத்தன்மை

மஹிமா நிறுவனம், இந்த திட்டத்திற்கான ஹார்ட்வேர் வசதியை ஆலயங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அதேவேளையில், ஆலயங்கள் மாதந்தோறும் ஒரு குறைந்த தொகையை பராமரிப்பு மற்றும் சேவைக்காக செலுத்தும்.

இந்த முயற்சியின் மூலம்  அர்ச்சனைகள் முதல் நிதி உதவிகள் வரை அனைத்தும் டிஜிட்டல் இலக்கவியல் வழியாக நடைபெறும். இதனால் ஆலய கணக்குகள் சரிவர பராமரிக்கப்படுவதுடன், ஆண்டு இறுதியில் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கணக்கறிக்கைகளையும் துல்லியமாக தயாரிக்க முடியும்.

முதற்கட்டமாக, மஹிமா உறுப்பினர் ஆலயங்களில் இருந்து இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் மற்ற அனைத்து ஆலயங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.“நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் இலக்கவியலுக்கு மாற வேண்டும் என்பதே மஹிமாவின் முதன்மை இலக்காகும்,” என்று டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இடம்: கோலாலம்பூர்

Reference: https://nambikkai.com.my/detail/41122 

 

Watch Video

Share This :
Call Get Quote
Ready to digitalize your temple? Let's talk —
Get Quotation Call +60 16-586 8869